Monday, August 16, 2010

அட.. மக்கு மகேஷு...

                  டி.வி. பார்க்கும் அனைவருக்கும் பரிச்சயமான வார்த்தைகள் இது.. விக்ரம் தோன்றும் ஒரு நகைககடன் விளம்பரத்துக்கான வரிகள்.. ஆனால் நாம் பேசப்போவது இந்த விளம்பரத்தை பற்றியதல்ல. வேறு இரண்டு விளம்பரங்களைப் பற்றி. ஒன்று.. நடிகர் விஜய் தோன்றும் ஜாஸ் ஆலுகாஸின் விளம்பரம்.. இன்னொன்று DO-CO-MOவின் Pay per site (Body Builder) விளம்பரம்.. இந்த இரண்டு விளம்பரங்களையும் கொஞ்சம் அலசலாம் என நினைக்கிறேன்.. இதன் மூலம் கொஞ்சம் சினிமா / விளம்பர Making பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்பதே நோக்கம்.. மற்றபடி யாரையும் தாக்குவதல்ல என்பதை முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறேன்.

                முதலில் Joy Alukkas விளம்பரத்தை பார்க்கலாம். அதற்கு முன் பார்க்காதவர்கள் ஒருமுறை விளம்பரத்தை பார்த்துவிடுவதற்கு இந்த லிங்கை க்ளிக்கவும்..


இந்த விளம்பரத்தின் கதைகரு இதுதான்..

விஜய்.. இந்த விளம்பரத்தில் விஜயாகவே வருகிறார். அவர் எங்கோ காரில் போகும் போது..


 வழியில் தான் படித்த பள்ளிக்கூடம் வருகிறது. உடனே காரில் இருந்து இறங்கி.. உள்ளே வந்து பார்க்கிறார்.


அங்கு மாட்டப்பட்டுள்ள பள்ளிக்கூட மணியை பார்த்ததும் பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறார்.

அதற்கடுத்து காட்டப்படும் காட்சிகளில் எனக்கு சில குழப்பங்கள் இருப்பதால் விளம்பரத்தில் காட்டுவதை அப்படியே தருகிறேன். பள்ளிக்கூட மணி அடிக்கப்படுகிறது. மாணர்வர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள்.
மணியடிக்கும் பியூனை தலைமையாசிரியர் போன்ற ஒருவர் திட்டுகிறார்.


 “வேலையை விட்டு போ” என்கிறார். மாணவர்களும், ஆசிரியார்களும் சூழ்ந்து நின்று அதை வேடிக்கை பார்க்க, அந்த பியூன் தலைமையாசிரியரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.. கதறுகிறார்.


அப்போது சிறுவயது விஜய் கூட்டத்தில் இருந்து வந்து தானே மணியடித்ததாக சொல்கிறார்.


இதைக் கேட்டு தலைமையாசிரியர் கம்பை கீழே போட்டுவிட்டு செல்கிறார். விஜய் அந்த பள்ளியை விட்டே போகிறார்.

              
              அந்த நினைவுகளில் இருந்து மீளும் விஜய், அங்கு அதே பியூனை பார்க்கிறார்.
அவர் விஜயை பார்த்ததும் ஓடி வந்து காலில் விழுகிறார். தன் வேலையை(?) காப்பாற்றியதற்காக நன்றிகடன் செலுத்துகிறார்.


விஜயும் ஒரு மோதிரத்தை அவருக்கு அன்பளிப்பாக(?) கொடுத்துவிட்டு..


கார்களில் ஏறிச் செல்கிறார்.

         
               1. 25 நிமிடங்களில் ஒரு உணர்ச்சிக் காவியத்தையே எடுத்துள்ளார்கள்.. ங்கொய்யால.. கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எருமை கூட ஏரோப்ளேன் ஓட்டுதும்பாய்ங்க போல...

          இந்த விளம்பரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவாகச் சொல்லவில்லை.. மணியை யார் அடித்தார்கள்..? விஜயா? அல்லது ப்யூனா...  ப்யூன் என்றால்.. அவர் எதற்காக த(க)ண்டிக்கப்பட்டார்..? தவறுதலாக பள்ளி முடியும் நேரத்திற்கு முன்னரே மணியை அடித்துவிட்டாரா..? சரி அப்படி அவர் அடித்திருந்தால் மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்குத் தானே ஓடியிருக்க வேண்டும் ஏன் எல்லோரும் ஓர் இடத்தில் கூடினார்கள்? அப்படி அடித்தது ஒரு தவறு என்றால், தலைமையாசிரியர் என்ன செய்வார்.. ஆபிஸ் ரூமிற்கு கூப்பிட்டு “ஏன் பெருமாள் இப்படி பண்ணுன? அடுத்தவாட்டி இப்படி பண்ணுனா சம்பளத்தை கட் பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை ” என்று வேண்டுமானால் சொல்வார்.. அதை விடுத்து அத்தனை பசங்களையும், ஆசிரியர்களையும் கூட்டி, பள்ளியின் நடுவே அனைவரின் மத்தியிலும் வைத்து பிரம்பால் அடிக்கிறாராம், எட்டி உதைக்கிறாராம்.. ப்யூன் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.. ஆனால் அவர் மசியவில்லை.. ‘வேலையை வி்ட்டு போ’ என்கிறார். ஏன்னென்றால் அவர் ரொம்ப ஸ்டிர்க்ட்... ஸ்டிர்க்ட்... ஸ்டிர்க்ட்...
             
                    சரி ரொம்ப ஸ்டிர்க்ட்டான ஹெட்மாஸ்டர் என்றே  அவரது கேரக்டரைசேஷனை வைத்துக்கொண்டாலும்.. விஜய் வந்து “நான் தான் மணியடித்தேன்” என்று சொன்னதும் “விஜய்.. நீயா அடிச்சது” என்று கேட்டு,  ‘என்ன... காந்தியே.. துப்பாக்கிய தூக்கச் சொல்லிட்டாரா?’.. என்பதாய் ரியாக்ஷன் கொடுத்து’  கம்பை நழுவ விடுகிறார்.. அவருக்கு அப்போதே தெரியும் போல, விஜய் பிற்காலத்தில் இளைய தளபதியாக, பெரிய ஹீரோவாக வருவார்,  டாக்டர் பட்டம் எல்லாம் வாங்குவார்.. என்று..

                  அடுத்த ‘கட்’ அதை விட காமெடி.. ஒரு மாணவன் பள்ளிக்கூட மணியை அடித்ததற்காக.. அந்த பள்ளிக்கூகூகூடத்தையேயேயே.. விட்டு அனுப்பும் ஸ்கூலை நீங்கள் இங்குதான் பார்க்கமுடியும். இதோடு அவர்கள் விடவில்லை.. நினைவலைகளில் இருந்த மீளும் விஜய் அதே பியூனை பார்க்கிறார்.. அவர் அன்று இந்த வேலையை  (அமெரிக்க ஜனாதிபதி போஸ்ட்டை(?!)) விஜய் காப்பாற்றிக் கொடுத்ததை நினைத்துப் பார்த்து, புல்லரித்து போய்.. “உன்னால நான் எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்திருக்கிறேன் பார். இந்த ராஜ்ஜியத்தை கட்டி ஆளுரதெல்லாம் உன்னால தான்..” என்பது போல் ஓடி வந்து காலில் விழுகிறார்.... கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி போடுகிறேன்.. காலில் விழுகிறார்.. (ஏம்பா வயசுக்குனு ஒரு மரியாதை இல்லையா? என்னமோ போங்க...)  இவரும் மோதிரத்தை பரிசளித்து விட்டு 8 கார்களில் ‘சர்’ ‘சர்’ ‘சர்’ ‘சர்’ ‘சர்’ ‘சர்’ ‘சர்’ ‘சர்’ என போகிறார்..”

              விஜய் காரில் வருகிறார் என்றால் ஒரு காரில் வரட்டுமே.. எதற்கு 8 விலை உயர்ந்த கார்கள்.. (பில்டப்பு..?! விளம்பரத்துலயுமா?)  பத்தாதற்கு கூடவே 7 கார்களில் கருப்பு பூனைப்படை செக்யூரிட்டிகள்.. கிட்டத்தட்ட ஒரு முதலமைச்சருக்கு(?) இருப்பது போல்.. ஒரு வேளை இந்த சம்பவம் 2011க்கு அப்புறம் நடக்குதோ(?)

            மொத்தத்தில், இந்த விளம்பரத்தின் கரு சுத்த பேத்தல்.. முழுக்க முழுக்க சில்லரை செண்டிமெண்ட், மற்றும் விஜய்-பில்டப்பை நம்பி மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.. இது நடுநலையாக பார்ப்பவர் யாருக்கும் எரிச்சலை மட்டுமே கொடுக்கும்.. ரிமோட்டுக்கு வேலை வைக்கும். இதை ஒரு நல்ல விளம்பரம் என்று சொல்ல முடியாது.

              மற்றொரு விளம்பரமான Do-co-moவை பார்க்கலாம்.. இதன் லிங்க்குக்கு இங்கே க்ளிக்கவும்...
           

  இதன் கான்செப்ட் மிக எளிமையானது. அதன் காட்சிகளை இப்போது காணலாம்..

     ஒரு இளைஞன் தன் காதலியோடு கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். அப்போது பின்பக்கமாய் கைகளில் எக்ஸர்ஸைஸ் செய்யும் கருவியால் பயிற்சி செய்கிறான்.குளிக்கும் போதும் டம்பிள்ஸை தூக்கி பயிற்சி செய்கிறான்.பஸ்ஸில் போகும் போதும் கம்பிகளில் தொங்கியபடி ஃபுல்லப்ஸ் எடுக்கிறான்.


வீட்டிற்கு வரும் முதியவரிடம் (மில்ட்ரி ரிட்டன்?) கைகொடுக்கும் போதும் தனது மஸில்ஸ் தெரிய இறுக்கமாய் கைகொடுக்கிறான்.


காதலியுடன் ரெஸ்டாரெண்ட்டில் பெப்பர் பாட்டிலை திறக்கும் போதும் கையில் தவளை(!) தெரிய திறக்கிறான்.


கடைசியாய் ஷாப்பிங் போகையில்..

    

அங்கு ஒரு குழந்தை கண்ணில் பட..


அதையும் ‘வெயிட்’டாக பாவித்து மேலேயும், கீழேயும் தூக்கி எக்ஸர்ஸைஸ் செய்கிறான்.


                அவனது நோக்கம், செயல் எல்லாம் பாடியை வளர்ப்பது.. எல்லாவற்றிலும் அவன் அதையே பார்க்கிறான். அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பது மட்டுமே. இப்படி ‘உங்களது தேவையும் ஒன்றே ஒன்று தான் என்றால் (ஏதேனும் ஒரு வெப்சைட் மட்டும் தான் பார்க்க போகிறீர்கள் என்றால்..) நீங்கள் அந்த ஒன்றுக்கு மட்டும் காசு தந்தால் போதும்’ என்பதே இந்த விளம்பரம்.

            மிக எளிமையான நடை.. அருமையான கான்செப்ட், ஒவ்வொரு ப்ரேமிலும் நகைச்சுவை. ஒரு சர்ப்ரைஸ்.. ஏன் இப்படி செய்கிறான் என்ற ஒரு எதிர்பார்ப்பு.. கடைசியில் இது அத்தனைக்குமான விடை.. இந்த கட்டமைப்பு விளம்பரத்தை கடைசிவரை பார்க்க வைக்கும். ஒவ்வொரு முறையும் சேனலை மாற்றவிடாமல் பார்க்க வைக்கும். மனதி்ல் நிறுத்தும். அது தான் ஒரு விளம்பரத்தின் வெற்றி.. அது இங்கு மிக அழகாக கையாளப்பட்டிருக்கிறது.


           போனஸாக இன்னொரு மிகச்சிறந்த (வெளிநாட்டு) விளம்பரத்தையும் இங்கு தருகிறேன். அது எதற்கான விளம்பரம் என்று கடைசியில் தெரியவரும் போது, கண்டிப்பாய் நீங்கள் வியந்து போவீர்கள்...
லிங்க் இங்கே..
கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்...

9 comments:

 1. யூடியூப் இனையதளத்தில் இந்திய விளம்பரங்களையே அதிகம் தேடிப்பார்க்கப்படுகிறது. ஹட்சிஸன், வோடஃபோன், பல இன்சூரன்ஸ் கம்பெனிகள், இப்போது டோகோமோ என பல விளம்பரங்கள் அழகாக சித்தரிக்கப்படிகின்றன. இப்போதெல்லாம் நிகழ்ச்சிகளை விட விளம்பரங்களே அதிகம் கவர்கிறது.
  நன்றி
  வினோ =)

  ReplyDelete
 2. அந்த விஜய் விளம்பரத்துல முக்கியமான ஒரு விஷயத்தை விட்டுட்டீங்க. அந்த பியூன், "விஜய், நீங்கதான் ஹீரோ" அப்படின்னு சொல்லுவாரு. செம்ம காமெடி. ஆக்சுவலா பாத்தீங்கன்னா, இந்த விளம்பரம் ஒரு பொதுவான விளம்பரம். விஜய், கடைசியில பியூன் கையில கோக் பாட்டில கொடுத்துட்டு போனா, இது கோக் விளம்பரம். புரியுதா ட்ரிக்கு??

  ReplyDelete
 3. ஐயோ சாமி இந்த பில்டப்ப எப்பதான் மாத்துவாங்களோ!

  ReplyDelete
 4. படம் தான் மொக்கையா இருக்குனா அவரு நடிக்கிற விளம்பரமும் படு மொக்கை.

  ReplyDelete
 5. சார் அந்த கடைசி விளம்பரத்தை பார்த்து பயங்கரமா சிரிச்சேன்!

  ReplyDelete
 6. ஹாய் ஜோதி நான் ராம்..

  எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம்..

  r u like this..pls try..

  http://www.youtube.com/watch?v=3QyJs4g8tt8

  ReplyDelete
 7. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete